"இந்த மோதல் நாட்டைப் பொருத்தவரை நல்லதல்ல"

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 5 டிசம்பர், 2012 - 14:48 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

தலைமை நீதிபதிக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள பிரேரணையை பக்கசார்பற்ற முறையில் கையாளக் கூடிய ஒழுங்குகள் தற்போது இலங்கையில் இல்லை: சம்பந்தர்

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர்.

இலங்கையில் பிரதம நீதியரசருக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள பிரேரணை ஒரு முக்கியமான விஷயம், ஆனால் அதை பக்கசார்பற்ற முறையில் கையாளக் கூடிய ஒழுங்குகள் தற்போது இலங்கையில் இருப்பதாக எமக்குத் தெரியவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

ஷிராணி பண்டாரநாயக்க மீதான ஊழல் குற்றச்சாட்டு புகார்கள் குறித்து அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தேர்வுக் குழுவில் அவரும் ஒரு உறுப்பினராக இருக்கிறார்.

பாராளுமன்றத்துக்கும் உயர்நீதிமன்றத்துக்கும் இடையே இவ்விதமான ஒரு சச்சரவு, ஒரு மோதல், ஒரு கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பது நாட்டைப் பொறுத்தவரை ஒரு நல்ல விஷயம் அல்ல என்றும் சம்பந்தர் கூறுகிறார்

ஆனால் அரசியல் ரீதியாக செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும் போது, இந்த மாதிரியான நிலைமைகளை தவிர்ப்பது கடினம் எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.