"அமிலத் தாக்குதல் : அரசே மருத்துவச் செலவை ஏற்கவேண்டும்"

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 6 பிப்ரவரி, 2013 - 16:16 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

அமிலத் தாக்குதலுக்கு பாதிக்கப்படுவோருக்கான மருத்துவச் செலவை அரசே ஏற்க வேண்டும் என்று பெண்கள் அமைப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளன.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

இந்திய உச்சநீதிமன்றம் அமிலத் தாக்குதல்கள் பெருகுவதைத் தடுக்கும் வகையில் திட்டங்கள் தீட்டவென அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு புதன்கிழமை(6.2.13) உத்திரவிட்டது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்கப்பட வேண்டியது என்றாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ சிகிச்சை குறித்து தீர்ப்பில் ஏதும் கூறப்படவில்லை என்று இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் உறுப்பினர் வாசுகி தமிழோசையிடம் கூறினார்.

மேலும், அடர்த்தி அமில விற்பனைக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் எனவும் தாங்கள் கோருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போது மத்திய அரசு இயற்றியுள்ள அவசர சட்டத்தில் கூட, அமிலத் தாக்குதலுக்கான தண்டனை என்பதுதான் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், அதில் அபராதம் பத்து லட்சம் ரூபாய் வரை விதிக்கலாம், அத்தொகையில் ஒரு பகுதியை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கலாம் என்றுதான் கூறப்பட்டுள்ளது எனவும் வாசுகி கூறுகிறார்.

ஆனால் பாதிக்கப்பட்டவருக்கான மருத்துவ சிகிச்சைத் தொகையை யார் ஏற்றுக் கொள்வது என்பது தெளிவாக்கப்படாமல் இருக்கிறது எனவும அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

அவர் பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.