ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வடகொரியாவின் கடும்போக்கு நிலை ஏன்?

Image caption இராணுவத் தளபதிகளுடன் வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்

வடகொரியா எடுத்துள்ள கடும்போக்கு நிலைப்பாடு உலகின் பல நாடுகளை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் தள்ளியுள்ளது. வல்லரசு நாடான அமெரிக்காவை அணு ஆயுதம் கொண்டு தாக்குவோம் என்றும் வடகொரியா சவால் விட்டுள்ளது.

ஆனால் யதார்த்த ரீதியில் இந்த சவால்கள் எந்த அளவுக்கு சாத்தியமானவை என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. வடகொரியாவின் நெருங்கிய நட்பு நாடான சீனா இதுவரை பெரிய அளவில் கருத்துக்கள் ஏதும் வெளியிடவில்லை.

இந்த விஷயங்களுக்கு எல்லாம் என்ன காரணம் என்பது குறித்து கிழக்காசிய பாதுகாப்பு விவகாரங்கள் ஆய்வாளரும், சென்னை கிறுத்துவக் கல்லூரியில் அரசியல் விஞ்ஞானத் துறையின் பேராசிரியருமான டாக்டர் லாரன்ஸ் பிரபாகரன் அவர்கள் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்த கருத்துக்களை இங்கே கேட்கலாம்.