ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மரண தண்டனை: 'உச்சநீதிமன்ற தீர்ப்பு சரியல்ல'

ஆண்டுக் கணக்கில் சிறைவாசம் அனுபவித்த மரண தண்டனை கைதிகளுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றலாம் என்ற இந்திய உச்சநீதிமன்றத்தின் வாதம் சரியல்ல என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் கே.சந்துரு கூறுகிறார்.

டெல்லி குண்டுத் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டமை தொடர்பான வழக்கில் நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்துவிட்ட தேவிந்தர் பால் சிங் புல்லரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றமுடியாது என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பற்றி அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.