ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஜித்தா பாலத்தின் கீழே இலங்கையர்கள்: தொடரும் அவலம்!

  • 15 ஏப்ரல் 2013

சவூதி அரேபியாவில் ஜித்தா நகரில் பாலமொன்றுக்கு கீழே இலங்கையர்கள் சுமார் ஆயிரம் பேர் நாடு திரும்ப வழியின்றி தவித்துக் கொண்டிருப்பதாக அங்கிருந்து பிபிசி தமிழோசையிடம் பேசியவர்கள் கூறுகின்றனர்.

தொழில் நிறுவனங்களால் வெளியேற்றப்பட்ட தம்மை மூன்று மாத காலத்துக்குள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், தம்மை சொந்த நாட்டுக்கு அனுப்ப இலங்கைத் தூதரகம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

உணவும் குடிநீரும் இன்றி பல மாதங்களாக சிரமப்படும் தம்மை சொந்த நாட்டுக்கு மீட்டெடுக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இவர்கள் அண்மையில் சவுதியிலுள்ள இலங்கைத் தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.