ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'பிளவுபடாது, புரிந்துணர்வுடன் செயற்படுவோம்': மாவை எம்.பி.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்தும் ஒரே கட்டமைப்புக்குள் இயங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளதாகவும் தமக்கிடையில் ஏற்கனவே புரிந்துணர்வு நீடிப்பதாகவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா தமிழோசையிடம் கூறினார்.

தமிழர் பிரதேசங்களில் தீவிரமடைந்துகொண்டிருக்கும் இராணுவ நில ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராக போராட வேண்டிய நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்பங்களை ஏற்படுத்தும் பிரச்சாரங்களுக்கு இடமளிக்கக்கூடாது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கூறினார்.

வட மாகாணசபை தேர்தல் நடந்தால், அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையுடன் போட்டியிடும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் மாவை சேனாதிராஜா பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சி இரண்டு வாரத்துக்குள் இணங்காவிட்டால் இதர நான்கு தமிழ்க் கட்சிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவுசெய்யப் போவதாக செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. தெரிவித்துள்ள கருத்துக்கு பதிலளித்த போதே சேனாதிராஜா இந்தப் பதிலைத் தெரிவித்தார்.