ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'மனித உரிமைகள் பற்றி குற்றஞ்சாட்டுவோர் இலங்கை வந்து பாருங்கள்'

இலங்கையில் மனித உரிமைகள் தொடர்ந்தும் மீறப்படுவதாக தொடர்ந்தும் குற்றஞ்சாட்டுவோர் இலங்கை வந்து நிலைமைகளை நேரில் பார்க்க வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதீபா மஹநாம பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

வரும் நவம்பரில் நடக்கவுள்ள காமன்வெல்த் மாநாட்டுக்கு முன்னதாக மனித உரிமை மீறல்கள் தொடர்பான தேசிய விசாரணைகளை நடத்துவது தொடர்பில் இலங்கைக்கு செயல்நுட்ப உதவிகளை வழங்க காமன்வெல்த் செயலகம் முன்வந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.