ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'பணத்துக்காக சிறுவயதில் மணம் செய்யும் சிரியாவின் அகதி(அழகு)ப் பெண்கள்'

சிரியாவில் நடக்கும் கடுமையான போரினால் நாடு கடந்து செல்லும் அகதிகள் பல விதமான பிரச்சினைகளுக்கு ஆளாகின்றார்கள்.

தமது பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதற்காக சில அகதிக் குடும்பங்கள் தமது இளவயது மகள்மாரை திருமணம் செய்துகொடுத்து அதன் மூலம் வரும் பணத்தை பயன்படுத்துகின்றன.

சவுதி போன்ற சில வசதி படைத்த நாடுகளைச் சேர்ந்த செல்வந்தர்கள் பலர், அங்கு வந்து மிகவும் அழகான சிறுவயதுச் சிரியப் பெண்களை பணம் கொடுத்து திருமணம் செய்து கொள்கின்றனர்.

கிட்டத்தட்ட ஒரு விபச்சாரம் போல நடக்கும் இந்தத் திருமணங்களில் சில ஒரு சில வாரங்கள் கூட தாக்குப் பிடிப்பதில்லை. விவாகரத்தில் முடிந்து விடுகின்றன.

சிரியாவின் பெண்கள் அழகிகள், சிவந்த நிறத்தவர்கள், அழகிய, நீல மற்றும் பச்சைக் கண்களைக் கொண்டவர்கள் என்பதால் பல வயதான அரேபிய செல்வந்தர்கள் அவர்களை திருமணம் செய்ய ஆவலாக இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அந்தப் பெண்களை மனைவிகளாக நடத்துவதில்லை, அடிமைகளாக நடத்துவதாக முறைப்பாடுகள் வருகின்றன.

இப்படியான திருமணங்களை சில உதவி நிறுவனங்கள்கூட ஏற்பாடு செய்து தருகின்றன.

இவற்றுக்காக சில அகதிகளே தரகர்களாகவும் செயற்படுகின்றனர்.

இப்படியான திருமணங்களை செய்துகொண்ட அகதிக் குடும்பங்களின் கண்ணீரைச் சொல்லும் பிபிசியின் பெட்டகம். தமிழில் சீவகன்.

அதன் ஒலிவடிவத்தை நேயர்கள் இங்கு கேட்கலாம்.