ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஹலால்- வெசாக்: பொது பல சேனாவும் மதத் தீவிரவாதமும்

  • 17 மே 2013
Image caption பொது பல சேனாவே முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு காரணம் என்று முஸ்லிம் அமைச்சர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்

இலங்கையில் அரசாங்க அனுசரணையுடன் ஆண்டுதோறும் பௌத்தர்களால் கொண்டாடப்படும் வெசாக் தோரண கண்காட்சிகளின் போது, சமூக சீரழிவுகளைத் தடுக்க பிரம்புகளை எடுத்துக்கொண்டு வீதிகளில் இறங்கப்போவதாக பொது பல சேனா என்ற பௌத்த அமைப்பு கூறியுள்ளது.

வெசாக் பண்டிகை வணிகமயப்படுத்தப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது.

இலங்கையில் மத அடிப்படைவாதத்தை தூண்டுவதாகவும் மதம் பரப்புவதாகவும் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளுக்கு எதிராக குற்றஞ்சாட்டிவரும் பொது பல சேனாவின் தீவிர செயற்பாடுகள் தொடர்பில் பிபிசி தமிழோசை எழுப்பிய கேள்விகளுக்கு அந்த அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் அளித்த பதில்களை நேயர்கள் இங்கு கேட்கலாம்.