ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ரெயில் பெட்டி தயாரிப்பு பணி தனியாரிடம் ஒப்படைப்பு - ஐசிஎஃபில் சலசலப்பு

  • 21 மே 2013
Image caption பெரம்பலூர் ரெயில் பெட்டி தொழிற்சாலை

புகழ்மிக்க அரசு நிறுவனமான பெரம்பூர் ரெயில் பெட்டித் தொழிற்சாலையான ஐ.சி.எஃப் பெரும் நெருக்கடியை எதிர்நோக்குவதுபோலத் தோன்றுகிறது.

ரெயில் பெட்டிகள் தயாரிப்பை துரிதப்படுத்துவதாகக் கூறி இந்திய ரயில்வே வாரியம் 166 ரயில் பெட்டிகளைத் தயாரிக்க கல்கத்தாவில் உள்ள மூன்று தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

அதற்கான அனைத்து தளவாடங்களையும் வாரியமே வழங்கும், தொழில்நுட்ப உதவிகளை ஐசிஎஃப்ஃபும் பஞ்சாபிலுள்ள கபூர்தலா ரெயில்பெட்டித் தொழிற்சாலையும் வழங்கவேண்டும், வரைபடங்களுக்காக கட்டணம் எதுவும் வசூலிக்கக்கூடாது என இரு நிறுவனங்களுக்கும் உத்திரவிட்டிருக்கிறது.

இது பற்றி எமது சென்னை முகவர் டி என் கோபாலன் வழங்கும் பெட்டகத்தை நேயர்கள் இங்கு கேட்கலாம்.