ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மோடியின் பதவி உயர்வு பா ஜ க வுக்கு பலனளிக்குமா?

Image caption நரேந்திர மோடி

இந்தியாவின் மிகவும் சர்ச்சைக்குரிய அரசியல்வாதிகளில் ஒருவரான குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, இன்னும் ஓராண்டுக்குள் நடக்கவுள்ள இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் கமிட்டித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பெரும் அபிப்பிராய பேதங்களுக்குரிய ஒரு புள்ளியாக இருந்தும், நரேந்திர மோடியின் இந்த நியமனம், வலதுசாரி தேசிவாதக் கட்சியான பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அவர் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளது.

Image caption என் ராம்

நரேந்திர மோடிக்கு இந்த உயர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது மூத்த தலைவர்களான அத்வானி, யஷ்வந்த் சிங்கா, ஜஸ்வந்த சிங் போன்றாருக்கும், நிதிஷ் குமார் போன்ற கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் விருப்பமில்லாத ஒன்றாகவே இருக்கும் என்று சுட்டிக்காட்டுகிறார் இந்து பத்திரிகையின் முன்னாள் தலைமை ஆசிரியர் என் ராம்.

எனினும் அவரை பிரதமர் வேட்பாளாராக அறிவிக்கும் முடிவை பாரதிய ஜனதா கட்சி அவசரப்பட்டு இப்போது எடுக்காது எனவும் அவர் கூறுகிறார்.

அவர் பிபிசி தமிழோசைக்கு வழங்கிய பேட்டியை இங்கே கேட்கலாம்.