ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"இந்திய நேவிகேஷன் செயற்கைக்கோள் முக்கிய மைல்கல்"

இந்தியாவின் விண்வெளி ஆய்வுநிறுவனமான இஸ்ரோ திங்கட்கிழமையன்று இந்தியாவின் முதலாவது நேவிகேஷன் சேட்டிலைட் எனப்படும் குறிப்பிட்ட இடம் மற்றும் வழிகாட்டு செயற்கைக்கோளை விண்ணில் ஏவியிருக்கிறது.

ஐஆர்என்எஸ்எஸ்1ஏ என்று இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் பெயரிட்டிருக்கும் இந்த செயற்கைக்கோளை பி.எஸ்.எல்.வி. -சி 22 ரக ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருக்கிறது. தென்னிந்தியாவில் இருக்கும் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து திங்கள் இரவு ராக்கெட் ஏவப்பட்ட 20 நிமிஷங்களில் செயற்கைக்கோள், அதற்காக நிர்ணயிக்கப்பட்ட குறிப்பிட்ட புவிவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

இந்திய விண்வெளி ஆய்வின் மைல் கல்லாக வர்ணிக்கப்படும் இந்த செயற்கைக்கோள் அனுப்பும் தகவல்கள் தரைவழி, கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்துக்கும், பேரிடர் காலங்களிலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்திய விண்ணியல் சாதனைகளில் இந்த செயற்கைக்கோள் ஒரு முக்கிய மைல்கல் என்கிறார் இந்திய விண்ணியல் முன்னேற்றங்கள் குறித்து தொடர்ந்து எழுதி வரும் விஞ்ஞான எழுத்தாளர் மோஹன் சுந்தர ராஜன்.