ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

விண்ணிலிருந்து மலர் வடிவில் குதித்த ரஷ்யப் பெண்கள்

  • 16 ஜூலை 2013

விமானத்திலிருந்து பாராச்சூட் மூலம் குதிக்கும் ரஷ்ய சாதனை ஒன்றை அந்நாட்டின் பெண்கள் படைத்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை அவ்வகையில் தலைநகர் மாஸ்கோவிலிருந்து சுமார் 115 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கொலோம்னா நகருக்கு மேலாக நடுவானில் விமானத்திலிருந்து பாரச்சூட் மூலம் பூவையொத்த ஒரு வடிவமைப்பில் குதித்து புதிய ரஷ்ய சாதனை ஒன்றை செய்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் ‘விண்ணின் முத்துக்கள்’ எனப்படும் மகளிர் மட்டும் குழுவைச் சேர்ந்தர்கள்.

தமது இந்தச் சாதனையை கடந்த ஆண்டு கலிஃபோர்னியாப் பகுதியில் விண்ணிலிருந்து குதிக்கும் ஒரு முயற்சியின் போது உயிரிழந்த அணியின் தலைவர் ஐரினா சினிட்சினாவுக்கு அர்ப்பணித்துள்ளார்கள்.

காலஞ்சென்ற ஐரினாதான் இதற்கு முன்னர் 88 பேர் சேர்ந்து ஒரு பூவின் வடிவில் விண்ணிலிருந்து குதித்து ரஷ்ய சாதனை ஒன்றை ஏற்படுத்திய குழுவின் தலைவராக இருந்தவர்.

அச்சாதனை கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அதற்கு முன்னர் இருந்த ரஷ்ய சாதனைகளை முறியடித்தது.

இம்முறை ஐரினா சினிட்சினாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தங்களது மலர் வடிவமைப்பின் நடுவில் ஒரு இடத்தை வெற்றிடமாக வைத்திருந்தனர் அக்குழுவினர்.

தங்களது அமைப்பிலிருந்த ஐரினாவை விடுபட்ட ஒரு இதழாக சித்தரிக்கும் நோக்கிலேயே இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கடந்த சனிக்கிழமை இந்த ரஷ்யச் சாதனையை படைக்கும் முன்னர் அக்குழுவினர் இரண்டு நாட்கள் பயிற்சியினை மேற்கொண்டனர்.

அப்போது 40 மற்றும் 60 உறுப்பினர்களைக் கொண்ட குழுவாக பயிற்சியினை மேற்கொண்ட அவர்கள், இறுதியாக 101 பெண் உறுப்பினர்களுடன் விண்ணிலிருந்து குதித்து இச்சாதனையை படைத்துள்ளனர்.