நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (4.4 எம்பி)

ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல் தொழில்நுட்பத்தில் பிரச்சனையில்லை - முன்னாள் அதிகாரி

16 ஆகஸ்ட் 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 14:09 ஜிஎம்டி

நீர் முழ்கிக் கப்பலில் இருந்து வெடித்துச் சிதறும் குண்டுகள்

மும்பை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஐ என் எஸ் சிந்துரக்ஷக் என்ற நீர்மூழ்கிக் கப்பல் புதன்கிழமை அதிகாலை தீப்பிடித்து எரிந்ததில் அதில் இருந்த 18 பேரும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. நான்கு பேரின் சடலங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன.

ரஷ்யாவில் இருந்து வாங்கப்பட்ட ஐ என் எஸ் சிந்துரக்ஷக் கிலோ ரக நீர்மூழ்கிக் கப்பல் ஆகும். பிற நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கி அழிப்பதே இதன் முக்கிப் பணி.

இந்தக் கப்பலிலோ, இதன் தொழில்நுட்பத்திலோ எவ்வித அடிப்படை தவறுகளும் இல்லை என்று கூறுகிறார் இந்தியக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்களில் அதிகாரியாகப் பணியாற்றி ஒய்வு பெற்ற கமோடோர் எஸ் சேகர்.

நீர்மூழ்கிக் கப்பலின் பேட்டரிகளில் இருந்து வெளியேறும் ஹைட்ரஜன் வாயுவை வெளியேற்ற தக்க பொறிமுறைகள் உண்டு எனவும், இந்த விபத்து எதனால் நடைபெற்றது என்பது கடற்படை விசாரணைக்குப் பின்பே தெரியவரும் என்றும் அவர் தெரிவித்தார். அவரின் செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

இந்தியக் கடற்படையில் தற்போது 9 கிலோ ரக நீர்மூழ்கிக் கப்பல்களும், ஜெர்மனியில் இருந்து பெறப்பட்ட 4 கப்பல்களும், ரஷ்யாவில் இருந்து குத்தகைக்கு எடுக்கப்பட்ட அணு சக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலான ஐ என் எஸ் சக்ராவும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அணு சக்தியால் இயங்கும் ஐ என் எஸ் அரிஹாந்தும் சேவையில் உள்ளன.

இதில் ஐ என் எஸ் அரிஹாந்த் வருங்காலத்தில் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் கப்பலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.