ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சுவிஸில் தஞ்சம் கோரிகளை பொது இடங்களில் தடை செய்யும் போக்கு : காணொளி

  • 19 ஆகஸ்ட் 2013

சுவிஸ்நாட்டுக்கு தஞ்சம் கோரிவருபவர்களை, நீச்சல்குளங்கள், விளையாட்டு மைதானங்கள், விளையாட்டு திடல்கள் போன்ற பொது இடங்களில் தடை செய்வது குறித்த உள்ளூர் சமூகங்களின் திட்டங்கள் அங்கு சர்ச்சையை கிளப்பியுள்ளன.

அண்மைக்காலமாக அகதிகள் மீது அதிகரித்துவரும் வெறுப்புணர்வு, அவர்களை தூர நிறுத்திவைத்துப் பார்க்க சுவிஸ் மக்களை தூண்டுவதாகக் கூறப்படுகிறது.

அதேவேளை, அகதிகளை, தஞ்சம்கோரிகளை பொது இடங்களில் தடை செய்யும் திட்டம் குறித்து மனித உரிமை அமைப்புக்கள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளன.

இத்தகைய திட்டங்கள் இனவெறி ஆட்சிமுறையைக் குறிக்கும் ஒன்று என்று மனித உரிமை அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

இவை குறித்த ஒரு காணொளி.