நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (2.7 எம்பி)

ஆசிய நாடுகளின் நாணய இறங்குமுகம் ஏன்?

21 ஆகஸ்ட் 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 18:04 ஜிஎம்டி

இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் பண மதிப்பு இறங்கி வருகிறது

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாது வீழ்ச்சி என்ற சொற்தொடர் தற்போது அடிக்கடி ஊடகங்களால் பயன்படுத்தப்படுகிறது.

ஒரு டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 64 ரூபாய் என்ற அளவுக்கு போய்விட்டது.

ரூபாயின் மதிப்பை உயர்த்த ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் எடுத்த நடவடிக்கைகள் இதுவரை பயனளிக்கவில்லை.

ஆனால் இந்திய ரூபாய் மட்டுமல்ல பல ஆசிய மற்றும் வளர்ந்து வரும் நாடுகளின் பண மதிப்பு குறைந்து வருகிறது.

இது எதனால் ஏற்பட்டது என்பதை விளக்குகிறார் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிக்கையின் முதலீடு துறை ஆசிரியர் ஜேம்ஸ் மேக்கன்டாஷ்.