ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சென்னையில் வருமா மீட்டர் ஆட்டோ? - சிறப்புப் பெட்டகம்

Image caption சென்னை ஆட்டோ

ஆட்டோ மீட்டர் கட்டண முறை அறவே அமலில்லாத ஒரே மாநகரம் சென்னைதான் எனலாம்.

பல ஆண்டுகளாக மீட்டர் கட்டணம் மாற்றப்படாத நிலையில், ஓட்டுநர்களும் தங்கள் விருப்பத்திற்கேற்றாற்போல் வசூலித்துக்கொண்டிருகின்றனர்.

பிரச்சினை உச்சநீதிமன்றம் வரை செல்ல ஆகஸ்ட் 26க்குள் புதிய கட்டணங்களை நிர்ணயிப்பது குறித்து தமிழக அரசு நீதிமன்றத்திடம் தெரியப்படுத்தவேண்டும்.

இப்பின்னணியில் ஆலோசனைகள் துரிதமாக நடைபெற்றுவருகின்றன.

கட்டண விகிதங்களை மாற்றி அமைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டிருக்கும் டாக்டர் பிரஹ்லாத், டைம்ஸ் ஆஃப் இண்டியா நாளேட்டைச் சேர்ந்த செய்தியாளர் கார்த்திகேயன் ஹேமலதா, ஆட்டோ சம்மேளனத் தலைவர் சந்திரன், ஆட்டோ ஓட்டுநர்கள் பொதுமக்கள் இவ்வாறு பல தரப்பாரின் கருத்துக்களுடன் இவ்விவகாரத்தின் பல்வேறு பரிமாணங்களையும் அலசி தமிழோசையின் சென்னை முகவர் டி என் கோபாலன் வழங்கும் பெட்டக நிகழ்ச்சி