ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மெட்ராஸ் கஃபே படத்துக்கு எதிராக மும்பையிலும் போரட்டம்

  • 22 ஆகஸ்ட் 2013

இந்த வீடியோவில் ஒலி வர்ணனை இல்லை.

மெட்ராஸ் கஃபே படத்தை திரையிட தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இப்படத்துக்கு எதிராக மும்பையில் ஒரு போராட்டம் நடந்துள்ளது.

பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தி மற்றும் தமிழில் இந்தத் திரைப்படம் வெளியாகிறது. இந்திப் படத்திற்கு தணிக்கை குழுவின் சான்று கிடைத்துள்ளது. வரும் வெள்ளி அந்தப் படம் உலகெங்கும் வெளியிடப்படும். இப்படத்துக்கு தடை விதிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழ் படம் சான்றளிக்கப்பட்ட பிறகே வெளியிடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இலங்கை அரசு மீது நன்மதிப்பை உருவாக்க இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு அதிபர் ராஜபக்ஷ நிதி உதவி செய்துள்ளதாகவும் இலங்கை அரசு திரைப்பட தயாரிப்புக்கு பல வசதிகளை செய்துள்ளது என்றும் தமிழ் நாட்டில் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்தப் படத்தை நடிகர் ஜான் ஆப்ரஹாமும் வையாகாம்-18 என்ற நிறுவனத்தினரும் இணைந்து தயாரித்துள்ளனர். வையாகாம்-18 மும்பையில் இருக்கும் முன்னணி படத் தயாரிப்பு நிறுவனம். இப்படத்தின் இயக்குனர் ஷூஜித் சர்கார் இதற்கு முன் இயக்கிய இரண்டு படங்களுமே பாராட்டுக்களையும் – விருதுகளையும் வென்றுள்ளன.