ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

புதிய அமைச்சுக்கான காரணம் குறித்து அமைச்சர் ஹக்கீம்

Image caption அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் இலங்கை ஜனாதிபதி

சட்டம் ஒழுங்கு அமைச்சு என்ற பெயரில் புதிதாக அமைச்சு ஒன்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருக்கும் பொலிஸ் துறை புதிய அமைச்சின் கீழ் வரும் என்றும் கூறப்ப்ட்டுள்ளது.

இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய, போருக்குப் பின்னர் சிவிலியன் விவகாரங்களை கையாளும் பொலிஸ் பிரிவை, அரச படைகளை கையாளும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்து பிரித்து தனியாக இந்த புதிய அமைச்சின் கீழ் கொண்டுவந்துள்ளதாக இலங்கை நீதி அமைச்சரான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் இந்த அமைச்சின் செயலராக பணியாற்றுவார்.

இது குறித்து இலங்கையின் நீதி அமைச்சரான ரவூப் ஹக்கீம் அவர்களின் செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.