நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (3.6 எம்பி)

தேர்தலில் இராணுவம் தலையிடுவதாக த.தே.கூ ஜனாதிபதிக்குக் கடிதம்

10 செப்டம்பர் 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 16:15 ஜிஎம்டி

Image caption இலங்கை இராணுவம்

இலங்கையில் நடக்கவிருக்கும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் இலங்கை இராணுவம் ஆளும் கட்சிக்கு ஆதரவாக தலையிடுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக அந்தக் கட்சியின் தலைவரான இரா. சம்பந்தன் அவர்கள் இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதேவேளை வடமாகாண தேர்தலில் இராணுவ தலையீடுகள் இருப்பதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் அமைப்பும் கூறியுள்ளது.

ஆனால், இதனை இலங்கை இராணுவம் மறுத்துள்ளது.

இலங்கையின் வடமாகாண தேர்தலிலோ அல்லது வேறு எந்த தேர்தலிலோ இலங்கையின் முப்படைகளுக்கு எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது என்றும் இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்றும் இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல அதிகாரி கூறியுள்ளார்.

இவை குறித்த தமிழோசையின் ஒலிக் குறிப்பை இங்கு கேட்கலாம்.