ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பெற்ற மகளைக் கொன்ற தந்தை

12 செப்டம்பர் 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 12:36 ஜிஎம்டி

பாகிஸ்தானில் ஒருவர் தனது ஒன்றரை வயது பெண் குழந்தையை நீரில் மூழ்கடித்துக் கொன்றிருக்கிறார்.

அவருக்கு ஆண்குழந்தைதான் வேண்டும் என்பதற்காகத்தான் அவர் இந்தக் கொலையைச் செய்ததாக அவரது குடும்பத்தினர் கூறுகிறார்கள்.

அந்தக் கொலைக்காக தான் இப்போது வருந்துவதாக அவர் கூறுகிறார்.

பெண் குழந்தை என்ற காரணத்துக்காக அவர்களை கொல்லுகின்ற, தெற்காசியாவில் பெரிதாக காணப்படுகின்ற இந்தப் பிரச்சினையை, இந்த நிகழ்வு கோடிட்டுக் காட்டுகின்றது.