ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மிஸ் அமெரிக்கா பட்டத்தை வென்றார் இந்திய வம்சாவளிப் பெண்

இந்திய வம்சாவளியைச் சேரந்த 24 வயதான நீனா டவுலூரி, மிஸ் அமெரிக்கா அழகிப் போட்டியை வென்றுள்ளார்.

மிஸ் நியு யார்க்காக ஏற்கனவே தேர்வான நீனா, இந்தப் போட்டியில் கலந்து கொண்ட மற்ற 49 பெண்களைத் தோற்கடித்துப் பட்டம் வென்றார். கேள்வி பதில் பகுதியில், தான் பிளஸ்டிக் சர்ஜரியை எதிர்ப்பதாகவும், மனிதர்களுக்கிடையே காணப்படும் பன்முகத்தன்மையை, வேறுபாடுகளைக் கொண்டாட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.