ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'நியூஹாம் கவுன்ஸிலின் ஒருங்கிணைப்புத் திட்டம் ஏற்படுத்தியுள்ள சர்ச்சை'

லண்டனில் உள்ள முக்கிய உள்ளூராட்சி சபைகளில் ஒன்றனா கிழக்கு லண்டனுக்கான நியூஹாம் கவுன்ஸில், அங்கு மேலும் சமூகங்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அதனடிப்படையில் அந்த கவுன்ஸிலின் மேயரான சார். றொபின் வேல்ஸ் அவர்கள் கவுன்ஸிலின் மொழிபெயர்ப்பு சேவையை நிறுத்தியுள்ளார், நூலகங்களில் ஆங்கிலம் தவிர்ந்த ஏனைய மொழி பத்திரிகைகளை தடை செய்துள்ளார், தனிச் சமூக நிகழ்வுகளுக்கான நிதி உதவிகளை நிறுத்தியுள்ளார்.

வெள்ளையர்கள் சிறுபான்மையாகவும், வெவ்வேறு நாடுகளில் இருந்து வந்து குடியேறியவர்கள் 80 வீதமாகவும் வாழும் இந்தக் கவுன்ஸிலில் அனைவரையும் ஆங்கிலம் கற்கச் செய்ய வேண்டும் என்பது அவரது நோக்கம். அதன் மூலம் அனைத்து சமூகமும், பிரித்தானிய சமூகமாக ஒருங்கிணைய வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

ஆனால், இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.

இவை குறித்து ஆராயும் ஒலிப் பெட்டகம்.