நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (3.1 எம்பி)

வடமாகாணப் பொருளாதாரச் சவால்கள்

5 அக்டோபர் 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 15:31 ஜிஎம்டி

விரிவுரையாளர் அமிர்தலிங்கம்

போரினால் பாதிக்கப்பட்ட மக்களை பெருமளவில் கொண்ட வடக்கு மாகாண நிர்வாகம், அங்கு தேவையான புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதித் தேட்டங்களுக்கு சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று இலங்கையின் கொழும்பு பல்கலைக்கழக பொருளாதாரத் துறை சிரேஷ்ட விரிவுரையாளரான கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் கூறியுள்ளார்.

வரிகளை விதிக்கவோ, வெளிநாட்டு உதவிகள் மற்றும் கடன்களை நேரடியாகப் பெறவோ அதிகாரங்கள் இலங்கையின் மாகாண சபைகளுக்கு இல்லாத நிலையில், முத்திரைகளை வரிகளை மாத்திரமே அவை வசூலிக்க முடியும் என்றும், ஆனாலும் வடக்குக்கு மாகாணத்துக்கு இறைவரித்திணைக்களம் கிடையாததால், அதற்கும் தாமதமாகலாம் என்றும் அமிர்தலிங்கம் கூறுகிறார்.

ஆகவே மத்திய அரசுடன் இணக்கமாக போய் நிதியைப் பெற வேண்டிய நிலையே வடக்கு மாகாணத்துக்கு இருக்கும் என்றும் அவர் கூறுகிறார்.

இவை குறித்த அவரது செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.