ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

விடுதலைப் புலிகளை நினைவுகூரக் கோரும் தீர்மானங்களும் கெடுபிடிகளும்

இலங்கையில் யுத்தத்தினால் இறந்தவர்கள் மற்றும் யுத்த மோதல்களில் கொல்லப்பட்ட விடுதலைப்புலி அமைப்பைச் சேர்ந்தவர்கள் அனைவரையும் நினைவுகூர்வது தொடர்பில் சாவகச்சேரி மற்றும் கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி ஆகிய பிரதேச சபைகள் மேற்கொண்டுள்ள தீர்மானங்கள் இராணுவத்தின் கெடுபிடிகளை அதிகரிக்கச் செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைவாகவே மாவீரர்கள் உட்பட யுத்தத்தினால் இறந்தவர்கள் அனைவரையும் நினைவு கூர்வதற்குரிய ஏற்பாடுகளை வடமாகாண சபை செய்து தர வேண்டும் என்ற பிரேரணையைத் தாங்கள் சாவகச்சேரி பிரதேச சபையில் கொண்டு வந்து நிறைவேற்றியதாக அந்த சபையின் உறுப்பினர் சிறிஸ்கந்தராஜா சிறிரஞ்சன் தெரிவித்தார்.

இந்தவிடயம் குறித்து கருத்து வெளியிட்ட மூன்று மாவீரர்களின் தாயராகிய பெண்மணி ஒருவர், போராளிகளினதும், இறந்தவர்களினதும் ஆன்மா சாந்தியடைவதற்காக அஞ்சலிகளும் நினைவு நிகழ்வுகளும் நடத்தப்பட வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டார். ஆயினும் இந்தச் செயற்பாட்டினால் இராணுவத்தினர் மூலம் தீங்கு ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.