ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் யானைகள் ஊர்வலம்

இலங்கையின் தலைநகர் கொழும்பையும் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தையும் இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலை யானைக் கூட்டமொன்றின் அணிவகுப்புடன் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நெடுஞ்சாலையில் இசை வாத்தியங்கள் முழங்க, 50க்கும் மேற்பட்ட யானைகள் அணிவகுத்துச் சென்றதை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.

இந்த நெடுஞ்சாலையில் யானைகளுக்கு ஓட்டப் பந்தயம் ஒன்றை நடத்த அதிகாரிகள் எண்ணியிருந்த போதிலும், யானை புதிய கார்ப்பட்-தார்ச்சலையில் ஓட விரும்பாது என்பதால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

யுத்தம் முடிவடைந்த சூழ்நிலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த அதிவேக நெடுஞ்சாலை இலங்கைக்கு பெருமை சேர்ப்பதாக சுற்றுலாத்துறைத் தலைவர் கூறினார்.

2 மணிநேரம் எடுக்கும் பயணத்தை இந்த நெடுஞ்சாலை 20 நிமிடங்களாகக் குறைக்கிறது.

சுமார் 29 கோடி டாலர்கள் செலவில் 2009-ம் ஆண்டிலிருந்து இந்த நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்பட்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.