ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

துனிசியா : 'பாலியல் ஜிகாத்' - காணொளி

இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு பாலியல் சேவை செய்வதற்காக துனிசியாவில் இருக்கும் பெண்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி சாம்பி மலைப்பகுதிக்கும், சிரியாவுக்கும் போவதாக துனிசிய அரசாங்கம் அறிவித்தபோது, அது பெரும் அதிர்ச்சியோடு எதிர்கொள்ளப்பட்டது.

''பாலியல் ஜிகாத்'' என்ற பெயரில் அடிபட்ட இந்தச் செய்தி குறித்து பல காலமாக ஒரு மர்மமே நிலவி வந்தது.

இராணுவத்தினருடன் மோதும் அல்கைதாவுடன் தொடர்புடைய ஜிகாதிகளுக்கு பாலியல் சேவை செய்வதற்காக மலைப்பாங்கான ஒரு பகுதிக்கே இந்தப் பெண்கள் போவதாகக் கூறப்பட்டது.

அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களது பெற்றோர் அந்தக் கூற்றை மறுக்கிறார்கள்.

ஆனாலும் சில மதத்தலைவர்கள் அப்படியாக நடப்பதை ஒப்புக்கொள்கின்ற போதிலும் இஸ்லாத்தில் அதற்கு இடம் இல்லை என்று கூறுகிறார்கள்.

இவை குறித்து அங்கு சென்ற பிபிசி செய்தியாளரின் காணொளி ஆய்வு.