ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'மாதவிடாய் நப்கின்களைச் செய்யும் மலிவான இயந்திரம்' - காணொளி

மாதவிடாய் காலங்களில் பெண்கள் பயன்படுத்துவதற்கான நப்கின்களை மலிவான விலையில் தயாரிக்கும் இயந்திரம் ஒன்றை கோயம்புத்தூரைச் சேர்ந்த ஒருவர் கண்டுபிடித்து அறிமுகம் செய்துள்ளார்.

தமிழ்நாட்டின் கோயம்புத்தூரைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரே இதனை கண்டுபிடித்து ஏழைக் குடும்பங்களுக்கான வாழ்வாதாரத் தொழிலுக்கு உதவியாக அந்த மரத்திலான இயந்திரங்களை அறிமுகம் செய்துள்ளார்.

இதன் மூலம் மாதவிடாய் காலங்களில் பெண்கள் அழுக்கு துணிகளை அதற்காக பயன்படுத்தும் நிலை போய், நல்ல சுகாதாரமான வழிகளை அவர்கள் கையாள்வதற்கான வழியும் ஏற்படும் என்கிறார் முருகானந்தம்.

அந்த நப்கின்களை வாங்க பெரும் பணம் கொடுக்கும் நிலையும் இதனால் மாறிவிடும் என்றும் அவர் கூறுகிறார்.

தனது முயற்சி குறித்து அவர் இந்தக் காணொளியில் விளக்குகிறார்.