ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நிதாகத் சட்டமும், பாதிக்கப்படும் கேரளத் தொழிலாளர்களும் பகுதி 2

Image caption சவுதியிலிருந்து கேரளா திரும்பி சாலையோரக் கடை ஒன்றை நடத்தும் அப்துல் சலாம்.

எண்ணெய் வளம் மிகுந்த சவுதி அரேபியா உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வழி செய்யும் வகையில் கொண்டுவந்துள்ள நிதாகத் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், பல நாடுகள் அதன் காரணமாக எழும் பிரச்சினைகளை கையாள தயாராகி வருகின்றன.

கேரளவைச் சேர்ந்த லட்சக் கணக்கான மக்கள் வளைகுடா நாடுகளில் பணியாற்றி அந்த நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் பொருளாதார பங்களிப்பைச் செய்து வருகின்றனர்.

ஆனால் அவர்களில் ஆயிரக்கணகானவர்கள் வேலையை இழந்து மீண்டும் கேரளா திரும்பி வருவதன் காரணமாக ஏற்படும் சமூகப் பொருளாதாரத் தாக்கம் கணிசமான அளவில் இருக்கும் என்று கருதப்படுகிறது.

அதன் தாக்கங்கள் வடபகுதியிலுள்ள மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மாவட்டங்களில் ஏற்கனவே தெரிய ஆரம்பித்துள்ளன. பிரச்சினைகளின் தாக்கம் தெரிய ஆரம்பித்தாலும் அரசு இந்த விஷயத்தின் மெத்தனப் போக்கை கையாள்கிறது எனும் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன..

வெளிநாடுகளில் இருந்து வரும் பண வரவுகள் கேரளாவுக்கு மிகவும் முக்கியமானது என்றாலும் நிதாகத் சட்டத்தால் மாநிலத்தின் நிதியாதாராங்களுக்கு பாதிப்புகள் ஏற்பாடது எனக் கூறுகிறார் மாநில முதலமைச்சர் உம்மன் சாண்டி.

நிதாகத் சட்டம் காரணமாக பாதிக்கப்பட்டு கேரளா திரும்பியுள்ள தொழிலாளர்களின் நிலை குறித்து நமது சிவராமகிருஷ்ணன் தயாரித்து வழங்கும் பெட்டகத்தின் இரண்டாவது பகுதியை இங்கே கேட்கலாம்.