நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (2.6 எம்பி)

பிடிமானத்தை இழந்த மாவோயிஸ்டுகளும் நேபாளத்தின் எதிர்காலமும்

22 நவம்பர் 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 16:19 ஜிஎம்டி

காத்மண்டு தொகுதியில் பிரசண்டா தோல்வியடைந்துவிட்டார்

நேபாளத்தில் முன்னாள் பிரதமரும் மாவோயிஸ்ட் தலைவருமான பிரசண்டா என்று அழைகக்ப்படும் புஷ்பா கமால் தாஹால் தலைநகர் காத்மண்டு தேர்தல் தொகுதியில் தோல்வியைத் தழுவி விட்டார்.

அவரை மத்திய போக்குடைய நேபாளி காங்கிரஸ் ராஜன் கேசி தோற்கடித்துவிட்டார்.

2008ம் ஆண்டு நடந்த தேர்தலில் மிகப் பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் இந்தத் தொகுதியில் வெற்றிபெற்ற மாவோயிஸ்ட் தலைவருக்கு இது மிகப் பெரிய ஏமாற்றம்.

அப்போது பிரசண்டாவுக்கு விழுந்த வாக்குகள் இப்போது மத்திய, மிதவாதப் போக்குடைய நேபாளி காங்கிரஸுக்கும் மைய இடதுசாரியான ஒன்றிணைக்கப்பட்ட மார்க்கிஸ மற்றும் லெனினிஸக் கட்சிக்குமே கிடைத்துள்ளன.

பெரும்பான்மை வாக்குகள் அடிப்படையில் பிரதிநிதிகள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் 240 தொகுதிகளில் 150க்கும் மேற்பட்ட இடங்களில் மாவோயிஸ்ட்டுகள் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டனர்.

இன்னும் விகிதாசார அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படவுள்ள 335 பேரிலும் இதே நிலைதான் இருக்கும் என்று முடிவாகிவிட்டது.

நேபாளத்தின் புதிய அரசியலமைப்பை வரைவதில் மாவோயிஸ்டுகள் ஒத்துழைப்பார்களா என்ற கேள்விகள் இப்போது எழுந்துள்ளன. அதனால் நேபாளத்தின் எதி்ர்காலம் குறித்த கேள்விகளும் வலுத்துள்ளன