பிரேதப் பெட்டிப் போராட்டம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஐரோப்பிய ஒன்றியத்துடன் வணிக ஒப்பந்தத்தை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

உக்ரைன் அதிபர் யானூகோவிச், ஐரோப்பிய மாநாட்டுக்காக லித்வேனியா சென்றடைந்துள்ள நிலையில், உக்ரைன் தலைநகர் கீயேவில் அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான போராட்டங்கள் நடந்துவருகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்துகொள்வதற்கான வாய்ப்புகளை சுட்டிக்காட்டி நூறு பேர் வரையில், கவனயீர்ப்பு மரணச் சடங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரஷ்யாவின் அழுத்தம் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்துடனான வணிக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடுவதை உக்ரைன் கடந்த வாரம் தவிர்த்துவிட்டது.

ஆனால், அந்த ஒப்பந்தத்தில் உக்ரைன் கையெழுத்திட வேண்டும் என்று ஒருபகுதி உக்ரைன் மக்கள் கோரி வருகிறார்கள். அவர்களே இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.

வானவில் வர்ணங்கள் கொண்ட கொடியினால் மூடப்பட்ட பிரேதப் பெட்டி ஒன்றினை கீயேவில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகத்துக்கு கொண்டுசென்ற போராட்டக்காரர்கள், அங்கு மலர் வலயத்தை வைத்துச் சென்றுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான இந்த வணிக ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கிய உக்ரைனின் ஒரு படி நகர்வாகப் பார்க்கப்படுகின்றது.