ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

காணொளி: கொழும்பில் கோவணம் அணிந்து விவசாயிகள் போராட்டம்

  • 2 டிசம்பர் 2013

கொழும்பில், கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இலங்கை விவசாயிகள் கோவணம் அணிந்தவாறு நூதனமான கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.

வயல்நிலங்களில் பாரம்பரிய முறையில் கோவணம் அணிந்து தொழில்புரியும் விவசாயிகள் தங்களின் துயரங்கள் பற்றி மக்களை தெளிவுபடுத்தும் பொருட்டு தலைநகரின் மத்தியில் துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.

2014-ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் விவசாய ஓய்வூதியம் பெறுவோருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

விவசாய ஓய்வூதியத்துக்கான வயதை 60-லிருந்து 63 ஆக உயர்த்தும் தீர்மானத்தை உடனடியாக ரத்துசெய்யுமாறு விவசாயிகள் கோரினர்.

ஏற்கனவே செலுத்தப்படாதுள்ள விவசாயிகளுக்கான ஓய்வூதிய நிலுவைத் தொகையை செலுத்துமாறும் விவசாயிகள் கோரினர்.