நிசா பிஸ்வால்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'இலங்கை குறித்த சர்வதேசப் பொறுமை குறையும்' - காணொளி

இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் அட்டூழியங்கள் குறித்து உரிய நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், இலங்கை குறித்த சர்வதேசப் பொறுமை குறைந்துபோகும் என்று அமெரிக்காவின் தெற்காசியப் பிராந்தியத்துக்கான இராஜதந்திரி ஒருவர் கூறியுள்ளார்.

அமெரிக்க அரசுத்துறையின் துணைச் செயலரான நிசா பிஸ்வால் அவர்களே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து உரிய நடவடிக்கைகளை மார்ச் மாதத்துக்குள் எடுக்காவிட்டால், அது குறித்து சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றை நடத்துவதற்கான அழுத்தங்களை பிரிட்டன் கொடுக்கும் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமெரன் அவர்கள் கூறிய கருத்துடன் அமெரிக்காவும் ஒத்துப் போகின்றதா என்று செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அது குறித்த காணொளியை இங்கு காணலாம்.