ஏரியல் சரோன் : ஒரு போர் வீரன் மற்றும் அரசியல்வாதி...
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஏரியல் ஷரோன் : ஒரு போர் வீரன் மற்றும் அரசியல்வாதி...

8 வருடங்கள் கோமா நிலையில் இருந்த இஸ்ரேலிய முன்னாள் பிரதமரான ஏரியல் ஷரோன் அவர்கள், தனது 85வது வயதில் காலமானார். ( 1928 ஆம் ஆண்டு, பெப்ரவரி 27 இல் அவர் பிறந்தார்).

2006 ஜனவரி முதல் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட அவரது உடல்நிலை கடந்த சில வாரங்களில் மிகவும் மோசமடைந்தது.

1980களில் பாதுகாப்பு அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் அவர் மீது போர்க்குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால், தனது நாட்டின் எல்லையை வலுவாகப் பாதுகாத்ததாக, இஸ்ரேலியர்கள் அவரைப் புகழ்ந்தார்கள்.

அவரது அரசியல் வாழ்க்கை குறித்து மீள்பார்வை செய்யும் ஒரு காணொளி.