இராக்கிய நகரான ஃபலுஜா அல்கைதா ஆதரவு தீவிரவாதிகள் வசம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இராக்கிய நகரான ஃபலுஜா அல்கைதா ஆதரவு தீவிரவாதிகள் வசம்

  • 5 ஜனவரி 2014

இராக்கின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நகரான ஃபலுஜாவை அல்கைதாவுடன் தொடர்புடைய தீவிரவாதிகளிடம், இராக்கிய அரசாங்கம் இழந்து விட்டது.

ரமாடி நகரில் திங்களன்று சுன்னி அரபுக்களின் எதிர்ப்பு முகாம் ஒன்றை இராக்கிய அரச படைகள் தகர்த்ததை அடுத்து சண்டைகள் அங்கு ஆரம்பமாகின.

தீவிரவாதக் குழுக்கள் அழிக்கப்படும்வரை பின்வாங்கப் போவதில்லை என்று இராக்கிய பிரதமர் நூரி அல்மலிக்கி அவர்கள் கூறியுள்ளார்.

அல்கைதா ஆதரவு தீவிரவாதிகளுடன் சண்டையிட இராக்குக்கு உதவுவோம் என்று கூறியுள்ள அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஜோண் கெரி, ஆனால், அமெரிக்க படைகள் இராக்குக்கு மீண்டும் திரும்பாது என்றும் கூறியுள்ளார்.

ஃபலுஜா நகர் கைப்பற்றப்பட்டமை குறித்து பிபிசியின் இயான் பூத் அவர்களின் காணோளி.