நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (3.2 எம்பி)

"வருமான வரியை ஒழிப்பது முட்டாள்தனமானது"

7 ஜனவரி 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 17:27 ஜிஎம்டி

இந்திய ரூபாய்

வருமான வரியை ரத்து செய்வதால் கேடுதான் ஏற்படும் என்று இந்திய அரசின் ஒய்வு பெற்ற வருவாய்த் துறைச் செயலர் எம் ஆர் சிவராமன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள பல நேரடி மற்றும் மறைமுக வரிகளை விலக்கிவிட்டு பொருட்களை வாங்கும்போது மட்டும் செலுத்தக் கூடிய பரிவர்த்தனை வரியை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை பாரதிய ஜனதா கட்சியின் சில தலைவர்களும் அவர்களுடன் நெருங்கி செயல்படுவோரும் முன்வைக்கின்றனர்.

பொருட்களை வாங்கல் விற்றல் செயற்பாடுகளின்போது பரிவர்த்தனை வரி விதிக்கும் நடைமுறையைக் கொண்டுவந்தால், பலர் பொருட்களின் விலையை குறைத்து மதிப்பிட்டோ அல்லது வரி விதிப்பில் இருந்து தப்ப பணத்தைக் கொடுத்து வாங்கவோ முயல்வார்கள், எனவே இந்தப் புதிய வரியால் வரிவருமானம் கூடாது என்றும் அவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.