தெற்கு சுடான் : தப்பி ஓடும் மக்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தெற்கு சுடான் : தப்பி ஓடும் மக்கள் - காணொளி

தெற்கு சுடானின் அரசாங்கப் படைகள் முக்கிய நகரை கிளர்ச்சிக்காரர்களின் கைகளில் இருந்து மீட்க தயாராகிவரும் நிலையில், வன்செயல்களுக்குப் பயந்து ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து தப்பி ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

அந்த நாட்டின் மிக முக்கிய பெட்ரோல் உற்பத்தை மையமாகக் கருதப்படும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பெண்ட்யோ நகரை அரச படைகள் மிகவும் நெருங்கிவிட்டதாக இராணுவத்தின் சார்பிலான பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தெற்குசுடான் உள்நாட்டுப் போருக்குள் வீழ்ந்துகொண்டிருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்திருக்கிறார்கள்.

பிபிசியின் அலிஸ்டர் லெய்த்தெட் அவர்களின் காணொளி.