ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'தமிழ்நாட்டுடன் பேசவில்லை; இந்திய அரசுடன் தான் பேசுகிறோம்: ராஜித்த

Image caption மீனவர் பிரச்சனை மோசமடையக் காரணம் ஜெயலலிதா தான்: அமைச்சர் ராஜித்த

இலங்கை- இந்திய மீனவர் பிரச்சனை தொடர்பில் தாங்கள் பேச்சுவார்த்தை நடத்துவது இந்திய மத்திய அரசுடனேயே தவிர, தமிழ்நாடு அரசுடன் இல்லை என்று இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

எதிர்வரும் 20-ம் திகதி சென்னையில் இருதரப்பு மீனவர் சந்திப்பு நடக்கும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினாலும், அதுபற்றி தமக்கு இன்னும் அறிவிக்காதபடியால் அந்தச் சந்திப்பு நடப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.

தமிழகத்தில் உள்ள இலங்கை மீனவர்களை மட்டும் விடுவித்தால் போதாது என்றும் எல்லா இலங்கை மீனவர்களும் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.