ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ரவீந்திரனை பாலியல் இச்சைக்காக பலியாக்கிவிட்டனர்: தாய் கதறல்

Image caption கிருஷ்ணபிள்ளை ரவீந்திரனின் தாய்

ஐக்கிய அரபு ராஜ்யத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள ரவீந்திரனின் சடலத்தை நாட்டிற்கு எடுத்து வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் துணை முகாமையாளர் மங்கள ரந்தெனிய கூறுகின்றார்.

அந்நாட்டு பிரஜை ஒருவரை வாகனத்தினால் மோதிக் கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, மட்டக்களப்பு கொம்மாதுறை வாசியான கிருஷ்ணபிள்ளை ரவிந்திரன் என்ற இளைஞருக்கு கடந்த செவ்வாய்க் கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இதேவேளை கொல்லப்பட்டதாக கூறப்படும் நபர் தனது மகனுக்கு ஒருபால் உறவுக்கு வரும்படி நெருக்கடி கொடுப்பது பற்றி ஏற்கனவே மகன் தன்னிடம் கூறியிருந்தாக கிருஷ்ணபிள்ளை ரவிந்திரனின் தாயாரான நாகரத்தினம் கூறுகின்றார்.

மரண தண்டனைக்கான திகதி தீர்மானிக்கப்பட்ட பின்பு மகனை பார்வையிடவென அந்நாட்டிற்கு அழைத்து செல்லப்பட்ட தன்னிடம் சடலத்தை தர முடியாது என்றும் கையொப்பத்தை வைத்து விட்டு போகுமாறும் அதிகாரிகள் கோரிய போதிலும் தான் அதற்கு இணங்க வில்லை என்றும் அவர் தெரிவித்தார்.