ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கொரியா : தெற்கை நோக்கிய வடக்கின் சமாதானக் கரம்

25 ஜனவரி 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 15:00 ஜிஎம்டி

வடகொரியா தனது அண்டை நாடான தென்கொரியாவுக்கு சமாதானக் கரத்தை நீட்டியுள்ளது.

''எதிர்ப்புணர்வைத் தரக்கூடிய இராணுவ நடவடிக்கைகள்'' அனைத்துக்கும் முடிவு காணும் வகையில் நல்லிணக்கத்துக்கு வருமாறு ஒரு பகிரங்க கடிதத்தை அது தென்கொரியாவுக்கு அனுப்பியுள்ளது.

அந்தப் பிராந்தியத்தில் ஏற்படக் கூடிய ஒரு அணு ஆயுதப் பேரழிவைத் தடுக்க உதவுமாறு அது தென்கொரியாவை கோரியுள்ளது.

தென்கொரியா அமெரிக்காவுடனான தனது வருடாந்த இராணுவ ஒத்திகையை செய்வதற்கு சில வாரங்களுக்கு முன்னதாக இந்தக் கடிதம் வந்துள்ளது.

பிபிசியின் லிசி வில்லியம்சன் அவர்களின் காணொளி.