நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (5.6 எம்பி)

ஜேவிபியின் தலைமை மாற்றமும்- எழும் கேள்விகளும்

2 பிப்ரவரி 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 17:11 ஜிஎம்டி

ஸ்தாபகர் ரோஹண விஜயவீரவுக்குப் பின்னர் நீண்டகாலம் ஜேவிபி தலைவராக இருந்த சோமவன்சவிடமிருந்து அனுர குமார தலைமையை ஏற்றார்

மக்கள் விடுதலை முன்னணி மகிந்த ராஜபக்ஷவின் முதலாவது அரசாங்கத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியிருக்கிறது.

அதன்பின்னர் மகிந்த அரசாங்கத்திலிருந்து விலகி எதிரணியான ஜேவிபி, ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்தது.

அக்கட்சி அண்மைய ஆண்டுகளில் பல பிளவுகளைச் சந்தித்தது. முக்கிய செயற்பாட்டுக் குழுவொன்று அக்கட்சியிலிருந்து பிரிந்து தனிக்கட்சி ஒன்றும் உருவானது.

அண்மைய ஆண்டுகளாக தொடர் அரசியல் தோல்விகளைச் சந்தித்துவரும் ஜேவிபி என்ற மக்கள் விடுதலை முன்னணியின் புதிய தலைமை மாற்றம் குறித்தும், சிறுபான்மை சமூகத்திடமிருந்து அந்நியப்பட்டுள்ள அக்கட்சியால் தேசியக் கட்சியாக இயங்கமுடியுமா என்பது பற்றியும் தமிழோசை எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய குழு உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரன் அளித்த பதில்கள்.