ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இலங்கையில் தமிழ் மொழி மீது தொடரும் 'மாற்றாந்தாய் மனப்பான்மை'

  • 5 பிப்ரவரி 2014
படத்தின் காப்புரிமை httpwww.languagescom.gov.lk
Image caption இலங்கையின் தேசிய மொழிகள் ஆணைக்குழுவின் இணையதள நுழைவுப் பக்கம் (படம்-04.02.2014)

இலங்கையில் அரச நிறுவனங்களின் கட்டடங்கள் மற்றும் பொது இடங்களில் தொடர்ந்தும் தமிழ் மொழி எழுத்துப் பிழைகளுடனும் தவறான அர்த்தங்களுடன் எழுதப்பட்டுவருகின்றமை தொடர்பில் உள்ளூர் ஊடகங்கள் சுட்டிக்காட்டி வந்துள்ளன.

அரசின் அரசகரும மொழிகளுக்கான செயற்திட்டங்களையும் மும்மொழிக் கொள்கையையும் முன்னெடுத்துவருவதாகக் கூறும் மொழிகள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்கான அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிடம் பிபிசி இதுபற்றி கேள்வி எழுப்பியது.