ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நேபாள விமான விபத்து: சடலங்கள் மீட்பு- காணொளி

நேபாளத்தில், மேற்கே மலையொன்றில் மோதி விபத்துக்குள்ளான சிறிய விமானத்திலிருந்த 18 பயணிகளின் சடலங்களும் மீட்கப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

தலைநகர் காத்மண்டுவுக்கு சடலங்கள் கொண்டுசெல்லப்பட்டுள்ளன.

நேற்று ஞாயிற்றுக்கிழமை பொக்காரா சுற்றுலா நகரிலிருந்து பறந்து சிறிது நேரத்தில் நேபாள் ஏர்லைன்ஸ் விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

உள்ளூர் பயணிகளையும் டென்மார்க் பிரஜை என்று நம்பப்படுகின்ற வெளிநாட்டவர் ஒருவரையும் இந்த விமானம் ஏற்றிச் சென்றுள்ளது.

இந்த சிறிய விமானம் மோசமான காலநிலை காரணமாக விபத்துக்கு உள்ளாகியிருக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.