ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'ஒற்றுமையை குலைக்க வேண்டாம்': முஸ்லிம் பெண்கள்- காணொளி

சிலாபம், மாதம்பை பழைய நகரில் முஸ்லிம் அமைப்பொன்று இஸ்லாமிய வழிபாட்டுக்கும் தேசிய ஒற்றுமைக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதாகக் கூறி பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம் பெண்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நூற்றாண்டுக்கும் மேலாக தாம் ஒற்றுமையாக வாழ்ந்துவந்த ஊரில், சில வாரங்களுக்கு முன்னர் ஒருசிலர் மோதல்களை ஏற்படுத்திவருவதாகவும் அந்தப் பெண்கள் தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை தொழுகையை ஒரு பள்ளிவாசலிலேயே நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

இதேவேளை, மாதம்பை பழைய நகர் முஸ்லிம் பெண்கள் சுமத்துகின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வினவியபோது, எந்தவொரு சமய வழிபாட்டையும் பின்பற்ற தமக்கு உரிமை இருப்பதாக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாதம்பை கிளைத் தலைவர் ரமீஷ் மொஹமட் பிபிசியிடம் தெரிவித்தார்.