யுக்ரெய்னில் தொடரும் பிரச்சினைகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

யுக்ரெய்னில் தொடரும் பிரச்சினைகள் - காணொளி

யுக்ரெய்னின் புதிய அரசாங்கத்தின் பிரச்சினைகள் தொடருகின்றன.

சிம்ப்பெரோபோல் விமான நிலையத்துக்குள் அதிரடியாக அடையாளம் தெரியாத சுமார் 50 ஆயுததாரிகள் நுழைந்துள்ளதாக கிரிமியாவில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

அந்த விமான நிலையம் வழமைபோன்று செயற்படுவதாகவும், பல ஆயுதபாணிகள் அங்கு ரோந்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தற்போது வரும் செய்திகள் கூறுகின்றன.

யுக்ரெனிய நிகழ்வுகள் குறித்து முதல் தடவையாகக் கருத்துக் கூறியிருக்கும் ரஷ்ய அதிபர் பூட்டின் அவர்கள், யுக்ரெய்னுக்கான பொருளாதார மீட்புத் திட்டத்தில் மேற்குலகுடன் ஒத்துழைக்குமாறு ரஷ்ய அரசாங்கத்துக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

அதேவேளை, பொருளாதார பிரச்சினைகளை கையாள உதவி கோரும் உக்ரெய்னில் உள்ள புதிய அரசாங்கத்துக்கு அமெரிக்காவின் துணை அதிபரான ஜோ பைடன் தனது நாட்டின் ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

இவை குறித்த காணொளி.