ஜாதகக் கட்டம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ஜோதிடத்தை சேர்த்தது நியாயமே"

தஞ்சாவூர் தமிழ்ப் பலகலைக்கழகத்தில் பட்டயப் படிப்புக்கான ஒரு பாடத்திட்டமாக ஜோதிடம் சேர்க்கப்பட்டுள்ளதற்கு தமிழகத்திலிருந்து எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன.

திராவிடர் கழகத்தின் நாளேடான விடுதலையில் அண்மையில் தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்தின் முடிவுக்கு எதிராக தலையங்கம் ஒன்றும் எழுதப்பட்டிருந்தது.

Image caption ஜாதகக் கட்டம் ஒன்று

ஜோதிடம் அறிவியலுக்கு எதிரானது என்றும், அது பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுவது பிற்போக்குத்தனத்தை ஊக்குவிப்பதாக ஆகிவிடும் என்றும் இந்த நடவடிக்கையை எதிர்ப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் ஜோதிடம் சேர்க்கப்பட்டுள்ளது பிற்போக்குத் தனம் ஆகாது என அப்பல்கலைக்கழக துணைவேந்தர் திருமலை தமிழோசைக்கு அளித்த பேட்டியில் வாதிட்டார்.

தமிழரின் இலக்கியத்தில் ஜோதிடம் பற்றிய குறிப்புகள் பல இடம்பெறுவது, பண்டைய தமிழ் சமூகத்தில் ஜோதிடத்துக்கென ஒரு இடம், மக்களுக்கு அது மீதான நம்பிக்கை இருந்ததைக் காட்டுகிறது என்றும், அப்படி ஒரு விஷயத்தைப் பற்றி கல்விக் கண்ணோட்டத்தில் தெரிந்துகொள்வதில் தவறில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜோதிடத்தை அறிவியலாக ஏற்றுக்கொண்டு நம்புவதோ நம்பாமல் இருப்பதோ ஒருவர் தனிப்பட்ட முடிவு, பாடத்திட்டத்தில் வைத்ததாலேயே அதனை நம்ப வேண்டும் என பல்கலைக்கழகம் வலியுறுத்துவதாக ஆகிவிடாது என்று அவர் தெரிவித்தார்.