ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

யுக்ரெய்னால் ஏற்பட்டுள்ள ரஷ்ய - மேற்குலக முறுகல் - காணொளி

17 மார்ச் 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 13:20 ஜிஎம்டி

ரஷ்யாவுக்கு எதிராகத் தடைகளை விதிப்பது குறித்து ஆராய ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் இன்று சந்திக்கிறார்கள்.

ஞாயிறன்று நடந்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் யுக்ரெய்னில் இருந்து பிரிவது என்று பெரும்பான்மையான மக்கள் க்ரைமியா பிராந்தியத்தில் வாக்களித்ததை அடுத்து இந்த நகர்வு வந்திருக்கிறது.

க்ரைமியாவில் மகிழ்ச்சி ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்துள்ளன. ரஷ்யாவின் ஆதரவும் அதற்கு உண்டு.

யுக்ரெய்னில் இருந்து சுதந்திரமடைந்ததாக அறிவித்துள்ள க்ரைமிய நாடாளுமன்றம், ரஷ்யாவுடன் இணைவதற்கு விண்ணப்பித்துள்ளது.

ஆனால், யுக்ரெய்னிலும், மேற்கு நாடுகளிலும் இதற்கு எதிர்ப்பு காணப்படுகின்றது.

தனது நடவடிக்கைகளுக்காக ரஷ்யா தண்டிக்கப்படும் என்று அதிபர் ஒபாமா ரஷ்ய அதிபர் பூட்டினுக்கு தொலைபேசியில் கூறியுள்ளார்.

க்ரைமிய மக்கள் கருத்தறியும் வாக்களிப்பை சட்ட விரோதமானது என்று கூறியுள்ள அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் அதனை அங்கீகரிக்க மறுத்துள்ளன.

இது குறித்த பிபிசியின் காணொளி.