ஷியா - சுன்னி மோதலைத் தூண்டும் தொலைக்காட்சிகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஷியா - சுன்னி மோதலைத் தூண்டும் தொலைக்காட்சிகள் - காணொளி

உலகெங்கும் நடத்தப்படுகின்ற சில தீவிரவாத தொலைக்காட்சிகளில் பரப்பப்படும் தகவல்களால் இராக்கிலும், எகிப்திலும் முஸ்லிம்கள் இடையே நடக்கும் வகுப்புவாத மோதல்கள் தீவிரமாகத் தூண்டப்படுகின்றன.

சுன்னி மற்றும் ஷியா முஸ்லிம்கள் மத்தியில் காணப்படுகின்ற முரண்பாடுகள் அதிகரித்துவரும் நிலையில், இவர்களுக்கு இடையே இந்தப் பிராந்தியத்தில் நடக்கும் மோதல்களால் லட்சக் கணக்கானோர் உயிரிழந்திருக்கிறார்கள்.

இந்த வகுப்புவாத முரண்பாடுகள் எகிப்து, அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் இருந்து இயங்கும் தொலைக்காட்சிகளில் தோன்றும் தீவிரவாத மதகுருமாரின் வீராவேசப் பேச்சுக்களால் மேலும் மேலும் தூண்டப்படுகின்றன.

பிரிட்டன், எகிப்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து இராக் மற்றும் சிரியா போன்ற நாடுகளுக்கு இந்த தொலைக்காட்சிகள் செய்மதி மூலம் ஒளிபரப்புகின்றன.

இவை குறித்த பிபிசியின் அரபு சேவையின் காணொளி.