'இந்திய இராணுவத்தால் விதவைகளாக்கப்பட்டோர்'
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'இந்திய இராணுவத்தால் விதவைகளாக்கப்பட்டோர்' - காணொளி

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தேர்தல் ஒரு பெரிய திருவிழாவாகப் பார்க்கப்படுகின்றது.

ஆனால், வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இருக்கும் நூற்றுக்கணக்கான இளம் விதவைகளைப் போல பலர் இந்த திருவிழாவைக் கொண்டாடாமலும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

தமது கணவர்மார் இந்தியப் பாதுகாப்புப் படையினரால் சட்டத்துக்கு விரோதமான வகையில் சுட்டுக்கொல்லப்பட்டதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

இராணுவம் அவர்களை பிரிவினைத் தீவிரவாதிகளாக வர்ணிக்கிறது.

அங்கு பாதுகாப்புப் படையினர் சிறப்பு சட்டப் பாதுகாப்பை கொண்டிருக்கும் நிலையில் தாம், தமக்காக எழுந்துபோராடப்போவதாக அந்த விதவைகள் கூறுகிறார்கள்.

இந்தத் தேர்தலில் இருந்து அவர்கள் எதனை எதிர்பார்க்கிறார்கள் என்று பிபிசி செய்தியாளர் திவ்யா ஆர்யா சில பெண்களை கேட்டார்.

அது குறித்த காணொளி.