கண்டறியாக் கரும்பொருளைத் தேடி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கண்டறியாக் கரும்பொருளைத் தேடி - காணொளி

இந்தப் பிரபஞ்சத்தின் மாபெரும் மாயப்பொருளாகத் திகழுகின்ற கரும்பொருளைத் தேடி அறியும் பணியில் விஞ்ஞானிகள் மிகவும் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளார்கள்.

கரும்பொருளை விளங்கிக் கொள்வதற்கான நம்பிக்கையைத் தரக்கூடிய ஆய்வு ஒன்றை அவர்கள் ஆரம்பிக்கவுள்ளனர்.

இந்த அண்டவெளியில் ஒரு முக்கியமான மூலக்கூறாக இந்தக் கரும்பொருள் நம்பப்படுகின்றது. ஆனால், இதுவரை வரை எவராலும் அப்படி ஒன்று இருக்கின்றது என்பதைக் கூட நிரூபிக்க முடியவில்லை.

தெற்கு டகோட்டாவில் உள்ள தங்கச் சுரங்கத்தின் அடியில், இருக்கும் இதற்கான ஆய்வு கூடத்தை பார்க்கும் வாய்ப்பு எமது அறிவியல் செய்தியாளர் ரெபேக்கா மொரெல்லே அவர்களுக்கு கிடைத்தது.

அது குறித்த ஒரு காணொளி.